Published : 01 Sep 2015 10:25 AM
Last Updated : 01 Sep 2015 10:25 AM
அழகுசாதன பொருள்கள் விற்பனை செய்துவரும் இ-காமர்ஸ் நிறுவனமான நைகா வின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி.
அழகு சாதனப் பொருட்கள் மற்றும் உடல் ஆரோக்கிய பொருட்களை ஆன்லைன் மற்றும் ஸ்டோர்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறது இவரது நிறுவனம்.
டெமாசெக் முதலீட்டு ஆலோசனை நிறுவனத்தின் ஆலோசகர், ஏஎப் ஃபெர்கூசன் அண்ட் கோ நிறுவனத்தின் மேலாளர் மற்றும் கோடக் மஹிந்திரா கேபிடல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், ஆலோசராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
முதலீட்டு வங்கி பிரிவில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கோடக் இன்வெஸ்ட்மெண்ட் வங்கியில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.
டாபர் இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஏசிசி போன்ற நிறுவனங்களில் பொறுப்புகளற்ற இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
மும்பை பல்கலைக்கழகத்தில் பிகாம் பட்டமும், ஐஐஎம் அகமாதாபத் கல்வி நிறுவனத்தில் மேலாண்மையில் பட்டம் பெற்றவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT