

கோவிட்-19-க்கு இடையிலும், கோதுமை கொள்முதல் கடந்த வருடத்தை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கோவிட்-19-க்கு இடையிலும் அதிக உணவு தானிய கொள்முதலை உறுதி செய்திருப்பதாக மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.
நெருக்கடி காலங்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விவசாயிகளின் தேவைகளை எவ்வாறு புரிந்து கொண்டு பூர்த்தி செய்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று அவர் தெரிவித்தார்.
பசோலி மற்றும் ரியாசியில் விவசாயிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் சேவகர்கள் ஆகியோருடன் உரையாடிய சிங், கோதுமை கொள்முதல் கடந்த வருடத்தை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
பெருந்தொற்றின் போது கோதுமை, தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களின் கொள்முதல் நிலையங்களில் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் மேலும் கூறினார்.
மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு சுதந்திரத்தை அளிக்கின்றன என்று அவர் கூறினார்.
சொந்த லாபத்துக்காக இந்த சட்டங்களை எதிர்ப்பவர்கள், இவற்றை வேளாண் சமூகத்தின் எதிரிகளைப் போலவும், சுரண்டுவர்களுக்கு ஆதரிப்பளிப்பவை போலவும் தவறாக சித்தரிக்கிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.