

பங்குச் சந்தை முதலீட்டா ளர்களுக்கு நடப்பு ஆண்டில் 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு சுமார் 2.95 லட்சம் கோடி ரூபாய் சரிந்து 95.40 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது.
2014-ம் ஆண்டு பட்டியலிடப் பட்ட நிறுவனங்களின் சொத்து மதிப்பு 28 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்து 98.36 லட்சம் கோடியாக இருந்தது. அதேசமயம் கடந்த ஆண்டின் இடையே அனைத்து நிறுவ னங்களின் சந்தை மதிப்பு ரூ.100 லட்சம் கோடியை தொட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில காலாண்டு களாகவே பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது.
நிறுவனங்களின் வருமானம் குறைவது, சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கம் போன்ற பல காரணங்களால் பங்குச்சந்தை சரிந்தது.
இதனால் முதலீட்டாளர்கள் சொத்துமதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. நடப்பு ஆண்டில் சென் செக்ஸ் 1635 புள்ளிகள் அல்லது 5.94 சதவீதம் அளவுக்கு சரிந்தது.