

அதிகாரம் அளிக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்கள் குழு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறித்து முடிவெடுக்க நாளை கூடுகிறது. வரும் ஏப்ரல் 2016-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை குறைந்துகொண்டே வரும் என்றாலும் மாநில நிதியமைச்சர்கள் சந்திப்பு திட்டமிட்டப்படி நடக்கிறது.
கேரள நிதியமைச்சர் கே.எம்.மணி தலைமையில் நாளை கூடும் இக்குழு கூட்டத்தில் ஜிஎஸ்டியை அமல்படுத்த தேவையான மாதிரி வரைவு குறித்து முடிவெடுக்கப்படும்.
இந்தியா முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையினை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. அதனால் சுங்க வரி, சேவை வரி உள்ளிட்ட இதர வரிகள் இல்லாமல் போகும். இதனால் மூலம் இந்தியாவின் வளர்ச்சி 1முதல் 2 சதவீதம் வரை உயரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. ஆனால் மாநிலங் களவையில் பாஜகவுக்கு பலம் இல்லாததால் இந்த மசோதா நிறைவேறுவதில் சிக்கல் நீடிக்கிறது.