மொபைல் போன்கள் விலை அதிகரிக்கிறது: இறக்குமதி மீது 10% தீர்வை விதிக்கிறது மத்திய அரசு

மொபைல் போன்கள் விலை அதிகரிக்கிறது: இறக்குமதி மீது 10% தீர்வை விதிக்கிறது மத்திய அரசு
Updated on
1 min read

மொபைல் போன்களின் டிஸ்ப்ளே இறக்குமதி மீது மத்திய அரசு 10% தீர்வை விதிப்பதையடுத்து மொபைல் போன்களின் விலை 3% வரை அதிகரிக்கும் என்று இந்திய செல்லுலார் மற்றும் மின்னணுக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

டிஸ்பிளே அசெம்ப்ளி மற்றும் டச் பேனல் மீதான தீர்வை அக்டோபர் 1ம் தேதி முதல் அதிகரிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, “மொபைல் போன்களின் விலை 1.5% முதல் 3% வரை அதிகரிக்கும்” என்று இந்தத் துறை தொடர்பான கூட்டமைப்பின் தலைவர் பங்கஜ் மொஹீந்த்ரூ தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டமைப்பில், ஆப்பிள், ஹூவேய், ஷியோமி, விவோ, வின்ஸ்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

இதன் காரணம் என்னவெனில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே டிஸ்ப்ளே டச் பேனல் உற்பத்திக்கு வழிவகை செய்வதே என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் மொஹிந்த்ரூ கூறும்போது, “கரோனா வைரஸ் மற்றும் தேசிய பசுமைத்தீர்ப்பாய தடைகளினால் டிஸ்ப்ளே அசெம்ப்ளி உற்பத்தி போதிய அளவில் செய்ய முடியவில்லை. ஆனால் துணை அசெம்பளிகள், மற்றும் உதிரிபாகங்களை இங்கேயே உற்பத்தி செய்வதில் முனைப்பாகவே இருக்கிறோம்” என்றார்.

2016-ல் வேதாந்தா குழும சேர்மன் அனில் அகர்வால் வோல்கன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனம் ட்வின்ஸ்டார் டிஸ்ப்ளே என்ற டிஸ்பிளே உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்க கோரிக்கை வைத்தது. ஆனால் அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அதனால் இத்திட்டம் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டிஸ்ப்ளே அசெம்ப்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு 10% தீர்வை விதிப்பதால் செல்போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in