

மஹிந்திரா நிறுவனம் தனது 75-வது ஆண்டு விழாவை ஒட்டி புதிய ‘தார்’ எஸ்யூவி வாகனத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
செயல்பாடு, வசதி, தொழில்நுட்பம், பாதுகாப்புக்கு பெயர்பெற்ற மற்றும் நீண்ட காலமாக பலரால் எதிர்பார்க்கப்பட்ட ‘தார்’எஸ்யூவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என்ற 2 வகைகளில், ரூ.9.80 லட்சம் முதல் ரூ.12.49 லட்சம் வரையிலான ஷோரூம் விலையில் கிடைக்கிறது.
இப்புதிய வாகனம் பிஎஸ்-6 புகை உமிழ்வு விதிகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 2.2 லிட்டர் டீசல் இன்ஜின், 6 கியர் மேனுவல், ஆட்டோமேடிக் வகைகளில் வெளியாகியுள்ளது. வாகனத்தின் மேல்பகுதி மாற்றக்கூடிய வகையிலும், கடினமான மற்றும் மென்மையான வகையிலும் கிடைக்கிறது.
எதிர்புறம் பார்த்த மாதிரியான 4 சீட் அமைப்பு மற்றும் 2 4 பக்கவாட்டு சீட் அமைப்புடன் உள்ளது. தொடுதிரையுடன் கூடிய 17.7 செ.மீ. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேலே பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்கள் போன்ற வசதிகளும், ஏபிஎஸ், ஈபிடி, 2 காற்றுப் பைகள், ஹில் ஹோல்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளும் இதில் உள்ளன.
இந்த எஸ்யூவி-க்கான புக்கிங் நேற்று தொடங்கியுள்ளது. https://auto.mahindra.com/buy/book-online?mgc=THRN என்ற இணையதளம் மூலமும் அருகில் உள்ள மஹிந்திரா டீலர்களிடமும் ரூ.21 ஆயிரம் முன்பணமாகச் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்யலாம். நவம்பர் 1-ம் தேதிமுதல் டெலிவரி கிடைக்கும்.
தார் எஸ்யூவி அறிமுக விழாவில் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவன் கோயங்கா, ஆட்டோ மற்றும் பண்ணை துறைகள் செயல் இயக்குநர் ராஜேஷ் ஜிஜூரிகர், தானியங்கி பிரிவு தலைமை செயல் அதிகாரி வீஜெய் நக்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.