நியாயமான, குறைந்தபட்ச வரிவிதிப்பு: வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஜேட்லி உறுதி

நியாயமான, குறைந்தபட்ச வரிவிதிப்பு: வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஜேட்லி உறுதி
Updated on
1 min read

இந்தியாவில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நியாயமான குறைந்தபட்ச வரி விதிப்பு இருக்கும். இத்தகைய வாய்ப்பை பயன்படுத்தி இந்தி யாவில் முதலீடு செய்ய அமெரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற 11-வது இந்திய அமெரிக்க பொரு ளாதார மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் மேலும் பேசியது: அமெரிக்க நிறுவனங்கள் இந்தி யாவில் குறிப்பாக கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இதன் மூலம் இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 50 ஆயிரம் கோடி டாலராக உயரும் என்று அவர் நம்பிக்கை தெரி வித்தார்.

சர்வதேச அளவில் பொரு ளாதார ஸ்திரமற்ற நிலை நிலவி னாலும் இந்தியாவில் அத்தகைய சூழல் இல்லை. அதற்கு மக்களின் சேமிப்பு இங்கு வலுவாக இருப்பது ஒரு காரணம் என்று குறிப்பிட்டார். மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருவதால் இந்திய அரசு கட்டமைப்புத் துறையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த வாய்ப்பை அமெரிக்க நிறுவனங்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றார்.

வெளிப்படையான அதே சமயம் ஏற்கக் கூடிய வரி விதிப்பு முறையை உருவாக்க அரசு மிகுந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. தொழில் தொடங் குவதில் உள்ள முட்டுக்கட்டை களை நீக்கி சுலபமான வழிகளை உருவாக்குவதோடு முடிவுகளை உடனுக்குடன் எடுக்கும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இதற்கேற்ப கொள்கை முடிவுகளை அரசு வகுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். சாலை கட்டமைப்பு வசதி, துறைமுகம், ரயில்வே, சூழல் பாதிப்பில்லா எரிசக்தி துறைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.

கலிபோர்னியாவுக்கு விரைவில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள உள்ள சுற்றுப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா குறிப்பிட்டார். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு கலிபோர்னியா மாகாணத்துக்கு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in