Published : 02 Oct 2020 04:31 PM
Last Updated : 02 Oct 2020 04:31 PM

மறக்காமல் படிங்க…டெபிட், கிரெடிட் கார்டுகளில் வந்துள்ள புதிய 10 மாற்றங்கள் என்ன?

பிரதிநிதித்துவப்படம்

மும்பை


டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி பல புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்தும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

வங்கிக்கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் டெபிட் கார்டு பெரும்பாலும் இருக்கும். கிரெடிட் கார்டுகள் ஒவ்வொருவரின் ஊதியத்துக்கு ஏற்பட வங்கிகள் வழங்குகின்றன, தேவைப்படுபவர்கள் ஏற்றுக்கொண்டு பயன்படுத்தி வருகின்றன.

ஆனால், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போதும், ஆன்-லைனில் பொருட்களை வாங்கும்போது பல்வேறு இடர்பாடுகள், திருட்டுகள், மோசடிகள் நடக்கின்றன. இந்த மின்னணு திருட்டுகள், மோசடி மூலம் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இதைத் தடுக்கவும் வாடிக்கையாளர்களின் நலன்காக்கவும் ரிசர்வ் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த விவரம் வருமாறு.

  • அனைத்து டெபிட், கிரெடிட் கார்டுகளும் இந்தியாவில் உள்ள ஏடிஎம் மையங்கள், பாயின்ட் ஆஃப் சேல் எந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளிலும் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும் எனும் வசதியை வாடிக்கையாளர்கள் பெற விரும்பினால், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கிள், கிரெடிட் கார்டுகள் வழங்கியுள்ள வங்கியிடம் வேண்டுகோள் விடுத்து வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த அறிவிக்கைக்கு முன் பெரும்பாலான வங்கிகள் வெளிநாடுகளிலும் தங்களின் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வகையில் வசதி செய்திருந்தன.
  • ஏற்கெனவே டெபிட் ,கிரெடிட் கார்டுகளை இந்த வசதியுடன் வைத்திருப்பவர்கள் குறித்து கார்டு வழங்கும் வங்கிகள் முடிவு எடுக்கும். வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய வசதி இருந்தால் முடக்கி வைத்து,வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்குப்பின் மீண்டும் வழங்கலாம். இது வங்கியின் முடிவாகும்.
  • டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஆன்-ைலன் பரிவர்த்தனை அல்லது "கான்டாக்ட்லெஸ்" பரிவர்த்தனையை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ செய்யாமல் இருந்தால், அந்த கார்டுகளின் ஆன்-லைன் பேமெண்ட் வசதியை நிறுத்திவைக்க வங்கிகளுக்கும், கார்டு வழங்கிய நிறுவனங்களுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அது நடைமுறைக்கு வந்துள்ளது.
  • புதிய விதியின்படி, கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் "ஆப்ட் இன்" அல்லது "ஆப்ட் அவுட்" சேவையைப் பெறலாம், ஆன்லைனிலும், சர்வதேச பரிவர்த்தனைகளிலும், கான்டாக்ட்லெஸ் பரிவர்த்தனையிலும் குறிப்பிட்ட அளவுவரை செலவு செய்ய அனுமதிக்கும் வசதியைப் பெறலாம்.
  • மொபைல், இன்டர்நெட் சேவை, ஏடிஎம், வாய்ஸ் சேவை ஆகியவற்றின் மூலம் பரிமாற்றங்கள் குறித்த சேவையை 24 மணிநேரமும் பெறும் வசதியை தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம் அல்லது நிறுத்திக்கொள்ளலாம்.
  • வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் கிரெடிட், டெபி்ட் கார்டுகளில் என்எப்சி வசதி அதாவது கான்டாக்ட் லெஸ் வசதி இருந்தால், அதை பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது அந்த சேவையை நிறுத்திக் கொள்ள முடியும்.
  • டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் கார்டுகளில் மூலம் பரிவர்த்தனை செய்யக்கூடிய அளவை நிர்ணயம் செய்யும் வசதியைப் பெற முடியும். அவசரச் செலவுக்கு பணம் தேவை, பில் பேமெண்ட், வீட்டுச் செலவு போன்றவற்றுக்கு பணம் தேவைப்படும்போது கார்டுகளில் செலவு செய்யும் அளவை குறைத்துக்கொள்ள முடியும்.
  • இந்த செலவு செய்யும், பரிவர்த்தனை செய்யும் அளவை நிர்ணயிக்கும் வசதி என்பது கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். ப்ரீபெய்ட் கிஃப்ட் கார்டுகள், மெட்ரோ கார்டுகளுக்கு பொருந்தாது.
  • செலுத்துதல் மற்றும் தீர்வு முறைச்சட்டம் 2007-ன் கீழ் இந்த புதிய விதிமறைகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x