மேக் இன் இந்தியா; ரூ.409 கோடிக்கு இந்திய நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம்  ஒப்பந்தம்

மேக் இன் இந்தியா; ரூ.409 கோடிக்கு இந்திய நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம்  ஒப்பந்தம்
Updated on
1 min read

'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், ரூ 409 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனம் ஒன்றுடன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதல் பிரிவு, 10,00,000 பல்முனை கையெறி குண்டுகளுக்காக நாக்பூரை சேர்ந்த திருவாளர்கள் எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்டுடன் (சோலார் குழுமம்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பழமையான இரண்டாம் உலகப் போர் வடிவமைப்பில் இந்திய ராணுவத்தின் வசம் தற்சமயம் உள்ள கையெறி குண்டுகளுக்கு மாற்றாக இவை இருக்கும்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) / டெர்மினல் பாலிஸ்டிக் ரிசர்ச் லாபரட்டரீஸால் வடிவமைக்கப்பட்ட இந்த கையெறி குண்டுகள் நாக்பூரை சேர்ந்த திருவாளர்கள் எக்கனாமிக் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட்டால் தயாரிக்கப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in