

மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அமைப்பு, 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான, தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை வெளியிட்டுள்ளது.
நாடெங்கிலும் உள்ள, தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த 78 மையங்களைச் சார்ந்த 289 சந்தைகளிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கான சில்லறை விலை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த குறியீட்டெண் வெளியிடப்படுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் தொழி்ற்சாலைப் பணியாளர்களுக்கான குறியீட்டெண் இரண்டு புள்ளிகள் அதிகரித்து, 338 ஆக இருந்தது. தற்போதைய குறியீட்டெண்ணின் அதிகபட்ச உயர்வைப் பொறுத்தவரை, மொத்த மாற்றத்தில், உணவுப் பொருள்கள் மட்டும் 1.14 சதவீதப் புள்ளிகளை வழங்கியுள்ளன.
அரிசி, கடலை எண்ணெய், பால் (எருமைப்பால்), கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெங்காயம், கேரட் கொத்தமல்லி, வெண்டைக்காய் உள்ளிட்ட பொருள்கள், குறியீட்டெண் உயர்வுக்குக் காரணம் ஆகும்.
எனினும், கோதுமை மாவு, துவரம் பருப்பு, வெள்ளைப் பூண்டு, வெங்காயம், ஆரம் லில்லி, தேங்காய், வெண்டைக்காய், எலுமிச்சை, மாங்காய், மண்ணெண்ணெய் போன்றவை குறியீட்டெண்ணில் வீழ்ச்சியடைந்தது, உயர்வைத் தடுத்துள்ளது