

உள்நாட்டு உற்பத்தியில் அரசு தன்னிறைவு பெற கவனம் செலுத்தும்போது இந்தியாவில் முதலீடு செய்ய இது நல்ல தருணம் என்று மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
ரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை மற்றும் ஃபிக்கி ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்” குறித்த ஒரு வெபினாரில் கவுடா உரையாற்றினார். “இந்தியா கெம் 2021” ஐ அதிகாரப்பூர்வமாக அவர் அறிமுகப்படுத்தினார், இது 2021 மார்ச் 17 முதல் 19 வரை நடைபெறும்.
"ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்" என்பது வளர்ச்சிக்கு பெரும் சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளில் ஒன்றாகும் என்று அமைச்சர் கூறினார். கடந்த இரண்டு தசாப்தங்களாக "ஸ்பெஷாலிட்டி கெமிக்கல்ஸ்" உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது.