Published : 29 Sep 2020 12:49 PM
Last Updated : 29 Sep 2020 12:49 PM

பிஎஃப் சந்தாதாரர்களுக்கு கூடுதல் வசதி; உமாங் செயலியில் கிடைக்கும்

இபிஎஸ் 1995 திட்டச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் வசதி தற்போது உமாங் செயலியில் கிடைக்கும்

புதிய மின் அரசாளுமைக்கான யூனிஃபைட் அலைபேசிச் செயலி (UMANG) ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்தச் செயலி கோவிட்-19 காலத்தில், அவர்கள் வீட்டில் இருந்தபடியே தங்கு தடையின்றி ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சேவைகளைப் பெற உதவியது.

பிஎஃப் சந்தாதாரர் ஒருவர், இபிஎப்ஓ வில் பதினாறு விதமான சேவைகளை உமாங் செயலி மூலமாக தங்களது அலைபேசியிலேயே பெற முடியும். தற்போது கூடுதலாக ஒரு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995இன் கீழ் திட்ட உறுப்பினர்கள் திட்டச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி 5.89 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்குப் பயனளிக்கும். உமாங் செயலியில் சேவைகளைப் பெறுவதற்கு நடப்பில் உள்ள யுனிவர்சல் கணக்கு எண் ஒன்றும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் ஒன்றும் அவசியம்.

நவீன தொழில் நுட்பங்களை சந்தாதாரர்களின் வாயிலுக்கு வெற்றிகரமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டு சென்றுள்ளது இதனால் உமாங் செயலியில் மிகவும் பிரபலமான சேவை அளிக்கும் அமைப்பாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திகழ்கிறது.

ஆகஸ்ட் 2019 முதல் இதுவரை 47.3 கோடி ஹிட்டுகள் இந்தச் செயலிக்கு கிடைத்துள்ளன. இதில் 41.6 கோடி ஹிட்டுகள் அல்லது 88 சதவிகிதம், ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சேவைகளுக்காகக் கிடைக்கப் பெற்றவை. அலைபேசி வாயிலாக டிஜிட்டல் இணைப்பு வழங்குவதில் மிகப்பெரும் அளவிலான வளர்ச்சியை இந்தியா கண்டு வருகிறது. உமாங் செயலி மூலமாக மிகவும் தொலைதூரப் பகுதிகளிலும் உள்ள உறுப்பினர்களுக்கும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மேலும் மேலும் பல சேவைகள் கிடைப்பதற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வகை செய்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x