Published : 28 Sep 2020 08:00 PM
Last Updated : 28 Sep 2020 08:00 PM

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 13.77 லட்சம் மெட்ரிக் டன்கள் தானியம், எண்ணெய் வித்து கொள்முதல்

புதுடெல்லி

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கரீப் பருவத்தின் போது 13.77 லட்சம் மெட்ரிக் டன்கள் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டுக்கான கரீப் சந்தைப்படுத்துதல் பருவம் தற்போது தான் ஆரம்பித்துள்ள நிலையில், கரீப் 2020-21 பயிர்களை ஏற்கனவே இருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டங்களின் படி, முந்தைய பருவங்களில் செய்தது போல், அரசு கொள்முதல் செய்து வருகிறது.

மாநிலங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கரீப் பருவத்தின் போது 13.77 லட்சம் மெட்ரிக் டன்கள் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், பரிந்துரைகள் வரப்பெற்றவுடன், ஒரு வேளை சந்தை விலைகள் அவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறைவாக இருக்கும் பட்சத்தில், கரீப் தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளின் கொள்முதல் விலை ஆதரவுத் திட்டத்தின் படி செய்யப்படும்.
2020 செப்டம்பர் 24 வரை, தமிழ்நாட்டில் உள்ள 40 விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில், ரூ 25 லட்சம் குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்புள்ள 34.20 மெட்ரிக் டன் பாசிப்பருப்பை தனது முதன்மை முகமைகளின் மூலம் அரசு கொள்முதல் செய்துள்ளது.

அதே போன்று, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 3961 விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், ரூ 52.40 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்புள்ள 5089 மெட்ரிக் டன்கள் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x