ரூ.20 ஆயிரம் கோடி வரி தொடர்பான வழக்கு: வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு

ரூ.20 ஆயிரம் கோடி வரி தொடர்பான வழக்கு: வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு
Updated on
1 min read

வோடபோன் குழுமம் பிஎல்சி நிறுவனத்துக்கு எதிராக ரூ.20 ஆயிரம் கோடி இந்திய அரசு வரி மற்றும் அபராதம் விதித்தது. இது இந்தியா – நெதர்லாந்து நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிரானது என சர்வதேச தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

நிறுவனம் வரி நிலுவை, அபராதம் செலுத்த வேண்டும் என இந்திய அரசு விதித்ததை ரத்து செய்வதாக தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் 54 லட்சம் டாலர் தொகையை சட்ட செலவு மற்றும் பகுதியளவு இழப்பீடாக இந்திய அரசு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் மீது மத்திய அரசு வரி தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கெய்ர்ன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீர்ப்பாயத்தில் இதுபோன்று நிறுவனங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில் பல ஆயிரம் கோடி டாலர்களை அரசு தனது கஜானாவில் இருந்து தரவேண்டியிருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in