Published : 23 Sep 2020 10:14 PM
Last Updated : 23 Sep 2020 10:14 PM

கோவிட்-19; மீண்டெழுவதற்காக தீவிர நடவடிக்கை: பியூஷ் கோயல் உறுதி

கோவிட்-19 பாதிப்பிலிருந்து புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மீண்டெழுவதற்காகவும், நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட உலகின் முக்கிய நாடுகளை கோவிட்-19 பெருந்தொற்று கடுமையாக பாதித்துள்ளது.

நமது நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாக பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டாலும், ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளும் முன்னேற்றத்தை கண்டு வருகின்றன.

தொழில்களுக்கு உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது. பிணை இல்லா கடன் வசதி, கடன் உத்தரவாத திட்டம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு நிதி உதவி, பிரதமரின் சுவாநிதி திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை கருத்தில் கொண்டு ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் குறிப்பிட்ட செயலிகளை அரசு தடை செய்தது.

இந்திய செயலி சூழலியலுக்கு ஊக்கமளிக்கும் வகையில் தற்சார்பு இந்தியா புதுமை சவாலை அரசு தொடங்கியது. ஏப்ரல்- ஜூலை 2019-இல்

23.45 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த சீன பொருட்களின் இறக்குமதி, ஏப்ரல்-ஜூலை 2020-இல் USD 16.60 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

கோவிட்-19 பாதிப்பிலிருந்து புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) மீண்டெழுவதற்காகவும், நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி, செபி, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் மற்றும் துறை சார்ந்த அமைச்சகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

கோவிட்-19 புது நிறுவன உதவி திட்டத்தை சிட்பி தொடங்கியுள்ளது. இதன் மூலம் புது நிறுவனங்களின் தொழிலாளர் பாதுகாப்பும், நிதி ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்படும்.

உலகின் எந்த மூலையில் உள்ள முதலீட்டாளரும் இந்தியாவில் தொழில் செய்வதற்கான நில இருப்பு தகவல்களை தெரிந்து தெரிந்து கொள்ளும் வகையில், முதல்கட்டமாக 6 மாநிலங்களில் உள்ள நிலங்களின் தகவல்கள் ஒருங்கிணைந்த தொழில் தகவல் அமைப்பு வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

தேசிய நில வங்கியை உருவாக்குவதற்காக, தொழில் நிலங்களின் அனைத்து தகவல்களையும் சேகரிக்க அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த தகவல்களை அளிப்பதற்காக அரசு முகமைகளுக்கு பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் அளிக்கப்பட்டுள்ளன.

இந்திய ஏற்றுமதிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட துறையில் உள்ள ஏற்றுமதிகளை ஊக்குவிப்பது இந்த குழுக்களின் பணியாகும். இந்த குழுக்களின் செயல்திறனை மதிப்பிட தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x