Published : 23 Sep 2020 07:08 PM
Last Updated : 23 Sep 2020 07:08 PM

அதிநவீன உள்கட்டமைப்புடன் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்கள்: மத்திய அரசு தகவல்

பிளாஸ்டிக் தயாரிப்பு தொழிற்துறையை ஒருங்கிணைப்பதற்கு, அதிநவீன உள்கட்டமைப்புடன் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களை மத்திய அரசு அமைத்து வருகிறது என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

மத்திய ரசாயண மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திரு. சதானந்த கவுடா மாநிலங்களவையில் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

நாடு முழுவதும் 10 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்கள் அமைக்க ரசாயணம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இவற்றில் 6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களை அசாம், மத்தியப் பிரதேசம்(2), ஒடிசா, தமிழ்நாடு மற்றும் ஜார்கண்ட்டில் அமைக்க இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை அமல்படுத்தும் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. மீதமுள்ள 4 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களை உத்தரகாண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அமைப்பதற்கான மதிப்பீடுகள் நடந்து வருகின்றன.

6 பிளாஸ்டிக் தயாரிப்பு மையங்களின் விவரம்:

1. மத்தியப் பிரதேசம்: தமோத் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தயாரிப்பு மையத்தில் கட்டுமான பணிகள் முடிந்து, சாதனங்கள் வாங்கும் பணிகள் நடக்கின்றன. இந்த மையத்தில் ஒரு ஆலை தற்போது செயல்படுகிறது.

2. மத்தியப் பிரதேசம்: பிலாவா என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் மையம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

3. ஒடிசா: பாரதீப் என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மையத்தின் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

4. ஜார்கண்ட்: தியோகர் என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மையத்தில் கட்டுமான பணிகள் நடக்கின்றன.

5. தமிழ்நாடு: திருவள்ளூரில் பிளாஸ்டிக் உற்பத்தி மையம் அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியுள்ளது.

6. அசாம்: தின்சுகியா என்ற இடத்தில் அமைக்கப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மையத்தில் கட்டுமான பணிகள் நடக்கின்றன.

புதுடெல்லி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x