

இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் ஹெச் 1 பி விசா நடைமுறையை மீறவில்லை என அமெரிக்க அரசு தெளிவுபடுத்தியுள்ளதாக இன்போசிஸ் நேற்று வெளி யிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
ஜூன் மாத தொடக்கத்தில் இது தொடர்பாக அமெரிக்க அரசு சோதனை மேற் கொண்டது. சோதனை முடிவில் இன்போசிஸ் நிறுவனம் ஹெச் 1 பி விசா விதிமுறை களை மீறவில்லை என கண்டு பிடித்துள்ளது.
இது தொடர்பான விசார ணைக்கு, தெற்கு கலிபோர் னியா எடிசன் புராஜெக்ட்டின் தொழிலாளர் விதிமுறை விண்ணப்பங்களை அமெரிக்க தொழிலாளர் துறைக்கு இன்போசிஸ் அனுப்பியது என்றும் அறிக் கையில் நிறுவனம் குறிப் பிட்டுள்ளது.
அமெரிக்க தொழிலாளர் துறையின் விசாரணைக்கு இன்போசிஸ் முழு ஒத்து ழைப்பு அளித்தது என்றும், இதற்காக 145 கோப்புகள் ஆய்வு செய்யப் பட்டுள்ளது என்றும் இந்நிறுவனம் கூறியுள்ளது. இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் ஹெச் 1 பி விசா விதிமுறை மீறியிருக்க வாய்ப்புள்ளதாக ஜூன் மாதத்தில் அமெரிக்க அரசு விசாரணையை தொடங் கியது. டிசிஎஸ் நிறுவனத்தின் விசாரணை முடிவு இன்னும் வெளிவரவில்லை.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பணியாற்ற வரும் வெளி நாட்டைச் சேர்ந்த தற்காலிக பணியாளர்களுக்கு அமெரிக்காவில் தங்குவதற் காக இந்த விசா வழங்கப் படுகிறது.