Published : 20 Sep 2020 08:24 PM
Last Updated : 20 Sep 2020 08:24 PM

கடந்த 3 வருடங்களில் 3,82,581 போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு தகவல்

கடந்த 3 வருடங்களில் 3,82,581 போலி நிறுவனங்களின் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது

போலி நிறுவனங்களைக் கண்டுபிடித்து அவற்றின் உரிமங்களை ரத்து செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை ஒன்றை அரசு எடுத்தது. தொடர்ந்து இரண்டு வருடங்களாகவோ அல்லது அதற்கு அதிகமாகவோ நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்காததன் அடிப்படையில், நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, நிறுவனங்கள் சட்டத்தின் விதிகளின் படி அவற்றின் மிது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களில் 3,82,581 போலி நிறுவனங்களின் மீது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இந்த தகவலை தெரிவித்தார்.

வரி ஏய்ப்பு செய்வதற்காகவும், சட்டவிரோதமாகச் செயல்படுவதற்காகவும் தொடங்கி நடத்தப்படும் போலி நிறுவனங்களை கண்டறிய பணிக்குழு ஒன்றை அரசு நியமித்தது. போலி நிறுவனங்களை, பல்வேறு பிரிவுகளுடன் இணைந்து செயல்பட்டு முறையான வழிகளில் தடுத்து, நடவடிக்கை எடுப்பதற்காகவும் இந்தப் பணிக்குழு அமைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x