Published : 20 Sep 2020 11:02 AM
Last Updated : 20 Sep 2020 11:02 AM

ஏழைகள் நல வேலை வாய்ப்பு திட்டம்; 116 மாவட்டங்களில் ரயில்வே  செயல்படுத்துகிறது

ஏழைகள் நல வேலை வாய்ப்பு திட்டம் ரயில்வேயால் 116 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. ரயில் நிலையங்களில் தூய்மை பேணப்படுகிறது.

ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 9,79,000 மனித உழைப்பு தினங்களுக்கான பணி, 2020 செப்டம்பர் 18 வரை இந்திய ரயில்வேயில் செய்யப்பட்டுள்ளது.

6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகியவை இந்த மாநிலங்கள் ஆகும்.

இந்த திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகளையும், மேற்கண்ட மாநிலங்களில் உள்ள இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வேலைவாய்ப்புகளையும் ரயில்வே அமைச்சகம் கண்காணித்து வருகிறது.

செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்காக 2020 செப்டம்பர் 18 வரை ரூபாய் 2056.97 கோடி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 164 ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள் இந்த மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தனக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் இந்திய ரயில்வே தூய்மையை பராமரித்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்துடன் இணைந்து 'தூய்மை மற்றும் சுற்றுச்சூழல்' என்னும் தலைப்பில் இணைய கருத்தரங்கு ஒன்றை வடக்கு ரயில்வே மூலம் இந்திய ரயில்வே நடத்தியது.

ரயில் நிலையங்கள், ரயில்கள், தண்டவாளங்கள், குடியிருப்புகள் மற்றும் இதர இடங்களில் சிறப்பான முறையில் தூய்மை மற்றும் கிருமி நாசினி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நெகிழி கழிவு மேலாண்மைக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x