

கள்ளச் சந்தையில் உரங்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா கூறினார்.
இந்த தகவலை மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா மாநிலங்கள் அவையில் கேட்கப்பட்ட கேள்வுக்கு எழுத்துப்பூர்வ பதிலாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:
விவசாயிகளுக்கு யூரியா அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) வழங்கப்படுகிறது
மத்திய அரசு உரத்தை அத்தியாவசியப் பொருளாக அறிவித்துள்ளது. கள்ளச் சந்தையில் உரங்களின் விற்பனையை தடுப்பது தவிர, அறிவிக்கப்பட்ட எம்ஆர்பியில் உரங்களை விற்பனை செய்வதை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு போதுமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
உரங்கள் (கட்டுப்பாட்டு) ஆணை (FCO), 1985 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 ஆகியவற்றின் விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராக தேடலை மேற்கொள்ளவும், பொருட்களை கையகப்படுத்தவும், தண்டனை நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு யூரியா அதிகபட்ச சில்லறை விலையில், 45 கிலோ யூரியா மூட்டை ரூ .242/- க்கும் 50 கிலோ யூரியா மூட்டை ரூ .268/- க்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.