இந்திய இ-காமர்ஸ் துறை 35% வளர்ச்சி அடையும்

இந்திய இ-காமர்ஸ் துறை 35% வளர்ச்சி அடையும்
Updated on
1 min read

இந்திய இ-காமர்ஸ் துறை அடுத்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு வருடமும் 35 சதவீத வளர்ச்சி அடையும் என்று அசோசேம் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்தி யர்கள் ஆன்லைனில் செலவு செய்யும் செய்யும் நேரம் 2016-ம் ஆண்டில் உயரும் என்று கணிக் கப்பட்டிருக்கிறது.

மாறாக ஷாப்பிங் மால்களில் மக்களின் வருகை குறைந் திருக்கிறது. ஷாப்பிங் மால்களில் இருக்கும் கடைகளில் சரா சரியாக 25 சதவீதம் காலியாக இருக்கின்றன. அவற்றின் வாடகை விகிதங்களும் சுமார் 30 சதவீதம் வரை குறைந்திருக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள ஷாப்பிங் மால்களில் 46 சதவீதம் காலியாகவும், இங்கிலாந்தில் உள்ள ஷாப்பிங் மால்களில் 32 சதவீதம் காலியாகவும் உள்ளன.

ஆன்லைன் விற்பனை அதிகரித்தும் ஷாப்பிங் மால்களில் வாங்குவது குறைந்தும் வருகிறது. இணையத்தை பயன்படுத்து வர்கள் அதிகரித்து வருவது மற்றும் இ-காமர்ஸ் துறையின் வர்த்தகம் தற்போது தான் அதிகரித்து வருவது போன்ற வற்றால் இத்துறையில் வளர்ச்சி வீதம் அதிகமாக இருப்பதாக அசோசேம் அமைப்பின் பொதுச் செயலாளர் டிஎஸ் ராவத் தெரி வித்துள்ளார்.

2014-ம் ஆண்டில் 4 கோடி வாடிக்கையாளர்கள் ஆன் லைனில் பொருட்கள் வாங்கினார்கள். இந்த எண்ணிக்கை 2015-ம் ஆண்டில் 6.5 கோடியாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.

அடுத்த 15 வருடங்களில் இந்தியாவில் உள்ள 45 சதவீதம் மால்கள் ரீடெய்ல் தவிர்த்து வேறு துறைக்கு மாறும்.

திரை அரங்குகள், உணவகங் களாக மாறும் வாய்ப்பு இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக் கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in