Published : 17 Sep 2020 04:12 PM
Last Updated : 17 Sep 2020 04:12 PM

ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிரடி சோதனை

காஷ்மீரின் ஸ்ரீநகர், குல்மார்க், சோனாமார்க் மற்றும் பாஹல்காமில் உணவகங்கள் நடத்தி வருபவரும், லேயில் ஒரு உணவகத்தைக் கட்டிவருபவருமான தொழிலதிபர் ஒருவர் தொடர்புடைய இடங்களில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் வருமான வரித் துறை ஈடுபட்டது.

2014-15-ஆம் ஆண்டிலிருந்து அவர் எந்த வரியையும் கட்டாத நிலையில், கடந்த ஆறு வருடங்களில் கணக்கில் வராத சுமார் ரூ 25 கோடி முதலீடு தொடர்பான பல்வேறு ஆவணங்கள், பொருட்கள் ஆகியவை இந்த நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டன. அசையா சொத்துகள், உணவகங்களின் கட்டுமானம் மற்றும் வீடுகளில் இந்த முதலீடுகள் செய்யப்பட்டிருந்தன.

கடந்த இரண்டு வருடங்களில் சந்தேகத்துக்கிடமான நபர்களிடம் இருந்து ரூ 25 கோடி கடன் வாங்கியிருப்பதும் தேடுதலின் போது தெரியவந்தது. இவரது குழந்தைகள் அமெரிக்காவில் படிப்பதும், இதற்காக வருடத்துக்கு ரூ 25 லட்சம் செலவிடப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், தனது தாயாருடன் சேர்ந்து அறக்கட்டளை ஒன்றின் மூலம் கல்வியியல் பயிற்சி கல்லூரி ஒன்றையும் இவர் நடத்தி வந்தது கண்டறியப்பட்டுள்ளது. வரி செலுத்த வேண்டிய அளவுக்கு போதுமான வருமானம் இந்த அறக்கட்டளைக்கு இருந்த போதும், அறக்கட்டளை பதிவு செய்யப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x