Published : 17 Sep 2020 03:59 PM
Last Updated : 17 Sep 2020 03:59 PM

மக்கள் நல மருந்தகங்களின் எண்ணிக்கையை 10500 ஆக அதிகரிக்க திட்டம்

வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் இறுதியில், பிரதமரின் மக்கள் நல மருந்தகங்களின் எண்ணிக்கையை 10500 ஆக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சர் டி.வி.சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு தரமான மருந்துகளை குறைந்த விலையில் வழங்குவதே அரசின் நோக்கம் என்று அவர் கூறினார். மக்கள் நல மருந்தகங்களை, மருந்துப் பொருட்கள் துறையின் கீழ் இயங்கும் பி.பி.பி.ஐ. (பீரோ ஆஃப் பார்மா பிஎஸ்யூ-ஸ் ஆஃப் இந்தியா) அமைத்து வருகிறது.

மத்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கை அடையும் போது நமது நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். 2020 செப்டம்பர் 15-ம் தேதி அன்று நிலவரப்படி நமது நாட்டில் உள்ள மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கை 6603 ஆக அதிகரித்துள்ளது.

2020-21 முதல் 2024-25 வரையிலான காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.490 கோடி நிதி ஒதுக்கீட்டால் மக்கள் நல மருந்தகங்கள் திட்டத்தின் கீழ் தரமான மருந்துகளின் விலைகள் கணிசமாக குறையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x