

டிசம்பர் மாதத்துக்குள் 4ஜி சேவை தொடங்கப்படும் என ஏர்செல் நிறுவனத்தின் தென் பிராந்திய வர்த்தக உத்திப் பிரிவுத் தலைவர் கை.சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.
ஏர்செல் சேவையை விரிவு படுத்தும் விதமாக 3 ஜி சேவை வழங்கும் பேருந்தை அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது.
இதை தொடங்கிவைத்து செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: ஏர்செல் நிறுவனம் 3 ஜி சேவை யை பரவலாக விரிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் 3 ஜி சேவை விரிவுபடுத்தும் பணி முடிக் கப்படும்.
தமிழகத்தில் 1.5 கோடி வாடிக் கையாளர்களுக்கு ஏர்செல் சேவை வழங்கி வருகிறது. செல்போன் கோபுரங்கள் கட்டமைப்பதும் அதிகரித்துள்ளோம். கடந்த 2011-ம் ஆண்டில் 917ஆக இருந்த செல்போன் கோபுரங்களின் எண்ணிக்கை தற்போது 2,624ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கூட இவ்வளவு குறைந்த கட்டணத்தில் இணைய சேவை கிடையாது. அங்கு ஒரு ஜி.பி. இணைய சேவையை பெறுவதற்கு 40 டாலர் தேவைப்படுகிறது. அதுவே இந்தியாவில் குறிப்பாக ஏர்செல்லில் ரூ.250-க்கு ஒரு ஜி.பி. இணைய சேவையைப் பெற முடியும்.
ஏர்செல்லின் 3 ஜி சேவை யை 40 சதவீதம் வாடிக்கையா ளர்களுக்கும், 2 ஜி சேவையை 96 சதவீதம் வாடிக்கையாளர் களுக்கும் வழங்கி வருகிறோம்.
7 ஆயிரம் கேஎம்எஸ் ஆப்டிகல் ஃபைபர் நெட் வொர்க்கில் வேகமான சேவை யை வழங்குகிறோம். வாடிக்கை யாளர்களின் சாதாரண பயன் பாட்டுக்கு 3 ஜி சேவையின் இணைய வேகம் அதிகமானது. இதனை, தமிழகம் முழுவதும் சீராக கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக விரிவுபடுத்தும் பணி யை அதிவேகமாகத் தொடங்கி உள்ளோம் என்றார் அவர்.