

மூன்று நாள் தொடர் சரிவுக்கு பிறகு இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகள் 1 சதவீதம் வரை உயர்ந்து முடிந்தன. புதன்கிழமை அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்ததால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்தன.
சென்செக்ஸ் 311 புள்ளிகள் உயர்ந்து 25764 புள்ளியிலும், நிப்டி 106 புள்ளிகள் உயர்ந்து 7823 புள்ளியிலும் முடிவடைந்தன. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. அனைத்து துறை குறியீடுகளும் உயர்ந்து முடிந்தன. ரியால்டி, மெட்டல், மின்சாரம், கேபிடல் குட்ஸ், வங்கி மற்றும் ஆட்டோ குறியீடுகள் அதிகம் உயர்ந்தன.
நிப்டி பங்குகளில் கெய்ர்ன் இந்தியா அதிகம் உயர்ந்து முடிந் தது. டாடா ஸ்டீல், ஹெச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் அல்ட்ரா டெக் சிமென்ட் ஆகிய பங்குகள் 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து முடிந்தன.
மாறாக ஐடியா, பிபிசிஎல், போஷ், லுபின் மற்றும் ஹீரோஹோண்டா ஆகிய பங்குகள் நேற்று அதிகம் சரிந்து முடிந்தன. புதன்கிழமை வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 1,573 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.