Last Updated : 14 Sep, 2020 04:20 PM

 

Published : 14 Sep 2020 04:20 PM
Last Updated : 14 Sep 2020 04:20 PM

சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு மூன்றில் இரண்டு பங்கு குறைந்தது: தர்மேந்திர பிரதான்

மத்தியப் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான். | கோப்புப் படம்.

கரோனா காலத்தில் பலர் வாழ்வாதாரம் இழந்த நிலையில், பலகோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் நாட்டில் நாளுக்குநாள் பெட்ரோல் டீசல் விலைகளை உயர்த்தி வருகிறது மத்திய அரசு.

இந்நிலையில் உலகம் முழுதும் கரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார நசிவினால் தேவை குறைந்து உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி கண்டது. இதனையடுத்து இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு மூன்றில் 2 பங்கு குறைந்தது என்று மத்திய பாஜக அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் (ஏப்-ஜூலை) இந்தியா 57.2 மில்லியன் டன்கள் கச்சா இறக்குமதிக்காக 12.4 பில்லியன் டாலர்கள் செலவிட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே 4 மாதகாலக் கட்டத்தில் 74.9 மில்லியன் கச்சா இறக்குமதிக்கு இந்தியா 36.2 பில்லியன் டாலர்கள் செலவிட்டது என்று எழுத்துபூர்வ பதிலில் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

ஜனவரி 2020-ல் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவு பேரல் ஒன்றுக்கு 64.31 டாலர்களாகும். இது மார்ச்சில் கரோனா பரவல் அதிகரிக்க பேரல் ஒன்றுக்கு 33.36 டாலராக குறைந்தது. ஏப்ரலில் பேரல் ஒன்றுக்கு 19.90 டாலர்களாகக் குறைந்தது.

ஆனால் சந்தை கொஞ்சம் மேம்பட்டதில் பேரல் ஒன்றுக்கு விலை மே மாதம் 30.60 டாலர்கள் என்று இருந்தது. ஜூனில் 40.62 டாலர்களாகவும் ஜூலையில் 43.35 டாலராகவும், ஆகஸ்டில் 44.19 டாலராகவும் இருந்தது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை 85% இறக்குமதி மூலம் தான் பூர்த்தி செய்யப்படுகிறது. ஏப்ரலில் லாக் டவுன் காரணமாக இந்தியாவின் எரிபொருள் நுகர்வு 9.89 டன்களாக குறைந்தது.

“கரோனா வைரஸ் பெருந்தொற்ற்ரினால் முன்னெப்போதும் இல்லாத தேவை சரிவு ஏற்பட இதனால் வருவாய் இழப்பும் ஏற்பட்டது. அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தேவை மே மாதத்தில் 14.63 மில்லியன் டன்களாகவும், ஜூனில் 16.25 மில்லியன் டன்களாகவும் சற்றே முன்னேற்றம் கண்டது, ஆனால் மாநில அளவில் லாக்டவுனினால் தேவை ஜூலை மாதம் 15.68 மில்லியன் டன்களாகக் குரைந்தது.

இந்த ஆண்டு மே மாதம் நாட்டின் கச்சா இறக்குமதி செலவு பல ஆண்டுகளின் தாழ்வை எட்டி 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்தது. 2019- மே மாதத்தில் இது 9.5 பில்லியன் டாலர்களாக இருந்தது.

இவ்வாறு கூறினார் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x