Published : 09 Sep 2015 10:36 AM
Last Updated : 09 Sep 2015 10:36 AM

இவரைத் தெரியுமா?- வில்லியம் பர்னே

ரிலையன்ஸ் குழுமத்தின் குளோபல் கிளவுட் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி.

15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசியாவில் பணியாற்றியவர். தொலைத்தொடர்பு விற்பனை துறை சார்ந்து சர்வதேச மற்றும் உள்நாட்டு அளவில் பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்தவர்.

சிங்கப்பூரை சேர்ந்த பாக்நெட் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

பாக்நெட் நிறுவனத்துக்காக பசிபிக் இண்டர்நெட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியவர். ஆசிய நெட்காம் நிறுவனத்தோடு இணைத்து பாக்நெட் நிறுவனத்தை மறு அறிமுகப்படுத்தினார்.

அமெரிக்க நிறுவனமான எம்சிஐ வேர்ல்டுகாம் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

குளோபல் ஒன் நிறுவனத்தில் மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

வெஸ்லெயன் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டமும் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேலாண்மையியலில் உயர்கல்வியும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x