

ஏர் இந்தியா நிறுவனம் பிரீமியம் எகானமி என்னும் புதிய வகுப்பை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இந்த புதிய பிரிவுக்கான தேவை உருவாகி வருவதால் இதைப் பயன்படுத்தி வருமானத்தை அதி கரிக்க ஏர் இந்தியா திட்டமிட் டி ருக்கிறது.
இப்போதைக்கு இந்தியாவில் விஸ்தாரா நிறுவனத்தில் (டாடா-எஸ்.ஐ.ஏ) மட்டுமே இந்த வகுப்பு இருக்கிறது. பொதுவாக விமானத்தில் இரு பிரிவுகள் உள்ளன. எகானமி மற்றும் பிஸி னஸ் வகுப்பு. எகானமி வகுப்பின் கட்டணம் குறைவாகவும் பிஸினஸ் வகுப்பின் கட்டணம் அதிக மாகவும் இருக்கும். இரண்டுக்கும் இடையே இருப்பதுதான் பிரீ மியம் எகானமி.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் சந்தையில் இப்போது தேவை அதிகரித்து வருகிறது என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து இன்னும் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. தவிர எந்தெந்த இடங்களுக்கு இந்த புதிய வகுப்புக்கான தேவை இருக்கும் என்பது குறித்து ஆராய வேண்டும் என்றார்.
இந்த வசதி முதன்முதலாக தைவான் நிறுவனமான இவா ஏர் நிறுவனத்தால் 1991-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுவாக பிஸினஸ் வகுப்பு கட்டணத்தை விட 60% குறைவாகவும், எகானமி வகுப்பு கட்டணத்தை விட 60% அதிகமாகவும் பிரீமியம் எகான மியின் கட்டணம் இருக்கும். கடந்த வருடம் டிக்கெட் விற்பனை மூலம் 15,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது ஏர் இந்தியா. இந்த வருமானத்தை உயர்த்த பல வகைகளில் திட்டமிட்டிருக்கிறோம். அதில் ஒன்றுதான் பிரீமியம் எகானமி என்றார் ஏர் இந்தியாவின் உயர் அதிகாரி ஒருவர்.