

சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டரை பயன்படுத்துவோரைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. 40 கோடி பேர் தங்களது சேவையைப் பயன்படுத் துவதாக இன்ஸ்டாகிராம் குறிப் பிட்டுள்ளது. ட்விட்டர் பயன்படுத்து வோர் எண்ணிக்கை 8 கோடி மட்டுமே.
புகைப்படத்தைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட இன் ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டு களாக அதிகரித்துள்ளது. பிற சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் ஸ்நாப்சாட் ஆகியவற்றைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் செய லியைப் பயன்படுத்துவோர் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் பயன்படுத்து வோரில் 75 சதவீதத்தினர் அமெரிக் கர் அல்லாத பிற நாட்டினர் என்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. 10 கோடி பேர் ஐரோப்பா, ஆசியா மற்றும் பிரேசில், ஜப்பான், இந்தோனேசி யாவைச் சேர்ந்தவர்களாக இருப்ப தாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்க மான இன்ஸ்டாகிராம் மேலும் பல புதிய அம்சங்களை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனால் இந்த செயலியைப் பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை 100 கோடி டாலருக்கு 2012-ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. சமீபத்தில் இந்த செயலியில் பல்வேறு சிறப்பம்சங்கள் சேர்க்கப் பட்டன. விளம்பரம் செய்வதற்கு வசதியாக இதில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் 2017-ம் ஆண்டில் விளம்பர வருவாய் 280 கோடி டாலரை எட்டும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
வாட்ஸ் அப் செயலியும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்த மானதுதான். இந்த செயலியை 90 கோடி மக்கள் பயன்படுத்து கின்றனர். ஃபேஸ்புக் சமூக வலை தளத்தை 70 கோடி மக்கள் பயன்படுத்துவது குறிப்பிடத் தக்கது.