Published : 11 Sep 2020 08:41 PM
Last Updated : 11 Sep 2020 08:41 PM

ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் பட்டியல் வெளியீடு: வளர்ந்து வரும் பிரிவில் தமிழகத்திற்கு இடம்

புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் குஜராத் உள்ள நிலையில் இந்த பிரிவில் வளர்ந்துவரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம் பெற்றுள்ளது.

ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் எனப்படும் புது நிறுவன சூழலியலுக்கு ஆதரவளிக்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலின் இரண்டாம் பதிப்பு இன்று வெளியிடப்பட்டது.

மத்திய வர்த்தகம், தொழில்கள் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இந்த பட்டியலை மெய்நிகர் முறையில் வெளியிட்டார்.

விமான போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணையமைச்சர் (தனி பொறுப்பு) ஹர்தீப்சிங் புரி, மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே போட்டித்தன்மையை ஊக்குவிக்கவும், பொது நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் சூழ்நிலையை மேம்படுத்தவும் இந்த தரவரிசை பட்டியலை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை தயாரித்துள்ளது.

இதில் குஜராத் முதல் இடம் பிடித்துள்ளது. கேரளா, கர்நாடக மாநிலங்கள் முன்னணி பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தலைமை பட்டியலில் மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம் வளர்ந்துவரும் மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா, மத்திய பிரதேச்ம, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x