கரோனா காலத்திலும் குறையாத சாகுபடி; 1104.54 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்

கரோனா காலத்திலும் குறையாத சாகுபடி; 1104.54 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்

Published on

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சுமார் 59 லட்சம் ஹெக்டேர் அதிக நிலப்பரப்பில் கரிப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன.

கடந்த வருடத்தின் 1045.18 லட்சம் ஹெக்டேருடன் ஒப்பிடும் போது, சுமார் 59 லட்சம் ஹெக்டேர் அதிக நிலப்பரப்பில், அதாவது 1104.54 லட்சம் ஹெக்டேரில் கரிப் பயிர்கள் இந்த ஆண்டு பயிரிடப்பட்டுள்ளன.

பருப்புகள், தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகளின் பயிரிடுதல் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்ட நிலையில், நெல் பயிரிடுதல் மட்டும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்றைய தேதி வரை, கோவிட்-19 பெருந்தொற்றின் காரணத்தால் கரிப் பருவத்தில் பயிரடப்படும் நிலத்தில் அளவில் எந்த பாதிப்பும் இல்லை. மத்திய வேளாண் அமைச்சகமும், மாநில அரசுகளும் பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுத்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in