

சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 1.22 லட்சம் கோடி கடன் வழங்க மத்திய அரசு நிர்ணயம் செய்திருப்பதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். இதுவரை 37 லட்சம் தொழில் முனைவோர்களுக்கு 24,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்றார். பஞ்சாப் நேஷனல் வங்கி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பல தொழில்முனைவோர்களுக்கு கடன் வழங்குவதற்கான கடிதத்தை வழங்கினார்.
மேலும் அவர் கூறியதாவது.
வரும் மார்ச் 2016க்குள் 1.22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல வேலை வாய்ப்புகளை உரு வாக்க முடியும். 1.25 கோடி முதல் 1.75 கோடி சிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
கடன் வாங்குபவர்கள் பிணை யாக எதையும் சமர்ப்பிக்கத் தேவை யில்லை. சிறிய தொழில் முனை வோர்கள் எப்படி பணத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து கடன் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.