Published : 24 Sep 2015 10:16 AM
Last Updated : 24 Sep 2015 10:16 AM

இவரைத் தெரியுமா?- ராஜிவ் ஜெயின்

பஜாஜ் பைனான்ஸ் நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்தப் பொறுப்பில் இருக்கிறார். வங்கி மற்றும் நிதிச்சேவைகள் பிரிவில் 20 வருட அனுபவம் மிக்கவர்.

அமெரிக்கன் கல்லூரியில் பிகாம் பட்டமும், TA Pai Management Institute-ல் எம்பிஏ பட்டமும் பெற்றவர்

ஐஷர் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றினார். அதன் பிறகு ஜிஇ மணி நிறுவனத்தில் 4 வருடம் பணி யாற்றினார்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவுத் தலைவராக இணைந்து அந்த பிரிவின் இயக்குநராக பதவி உயர்ந்தார். அதன் பிறகு 2006-ம் ஆண்டு ஏ.ஐ.ஜி நிறுவனத்தின் துணை தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்

ஒரு வருடத்தில் அங்கிருந்து விலகி பஜாஜ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். கடந்த ஏப்ரலில் இருந்து நிர்வாக இயக்குநராக இருக்கிறார்.

ரிசர்வ் வங்கி மீண்டும் வங்கிக்கு அனுமதி அளிக்கும்பட்சத்தில் அதற்கு விண்ணப்பிப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x