

‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தில் இணைந்து, ஐந்து லட்சம் இந்திய கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி செய்தி கொடுக்க திட்டமிட்டிருப்பதாக மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி அளித்த விருந்தில் கலந்து கொண்டு பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.
“மைக்ரோசாப்ட் நிறுவனம் பல விஷயங்களை செய்ய தயாராக இருக்கிறது. இந்திய அரசுடன் இணைந்து குறைந்த விலையில் ஐந்து லட்சம் கிராமங்களுக்கு பிராட் பேண்ட் வசதி செய்து கொடுக்க திட்ட மிடப்பட்டிருக்கிறோம். குறைந்த விலையில் இணைய வசதி கொடுக்கும்பட்சத்தில் புதுமைகள், புதிய விஷயங்களை அரசாங்கமும், தொழில்முனைவோர்களும் செய்ய முடியும்.
இதன் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் மற்றும் சேவைகளை தரமுடியும். அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘டிஜிட்டல் இந்தியா’ மூலம் சர்வதேச தரத்திலான கட்டுமான வசதிகள் இந்தியாவுக்கு வரும்” என சத்யா நாதெள்ள தெரிவித்தார்.
ரூ.1,000 கோடி முதலீடு குவால்காம் அறிவிப்பு
சிலிகான் பள்ளத்தாக்கினை சேர்ந்த குவால்காம் நிறுவனம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங் களில் 15 கோடி டாலர் முதலீடு செய்யப்போவதாக அறிவித்த்திருக் கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம். இந்தியாவை டிஜிட்டல் சமூகமாகவும் அறிவு சார்ந்த பொருளாதாரமாகவும் மாற்றுவதில் எங்களின் பங்களிப்பும் இருக்கும் என குவால்காம் செயல் தலைவர் பால் இ ஜேகப்ஸ் தெரிவித்துள்ளார்.
“புதுமையான இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவ முடிவு செய்திருக்கிறோம். இந்த நிறுவனங்களில் 15 கோடி டாலர் (சுமார் ரூ.992 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறோம். கடந்த 2007-ம் ஆண்டு முதலே நாங்கள் முதலீடு செய்து வருகி றோம். இதுவரை 20 இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறோம்.
மென்பொருள், வன்பொருள், இ-காமர்ஸ், ஹெல்த்கேர் மற்றும் ரீடெய்ல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் முதலீடு செய்திருக்கிறோம். 2007-ம் ஆண்டு முதல் முதலீடு செய்து வந்தாலும் 2008-ம் ஆண்டு முதல்தான் முழுமையாக செயல்பட ஆரம்பித்தோம். இந்தியா வில் முதலீடு செய்ய காத்திருக் கிறோம்” என பால் இ ஜேகப்ஸ் தெரிவித்துள்ளார்.