Published : 09 Sep 2020 03:17 PM
Last Updated : 09 Sep 2020 03:17 PM

ஆன்லைன் விற்பனை: சாதனை படைக்கும் காதி நிறுவனம்

காதி நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனை பெரிய அளவில் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இணைய சந்தைப்படுத்துதலில் கால் பதித்துள்ள காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் முயற்சி அகில இந்திய அளவில் பிரபலமடைந்து நாட்டின் தொலைதூர இடங்களையும் கைவினை கலைஞர்களின் பொருள்கள் அடையுமாறு செய்துள்ளது.

www.kviconline.gov.in/khadimask/ என்னும் இணைய முகவரியில் காதி முகக் கவசங்களுடன் இந்த ஆண்டு ஜூலை 7 அன்று தொடங்கப்பட்ட விற்பனை 180 பொருட்களுடன் தற்போது முழு வீச்சை எட்டியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிக பொருட்கள் இதில் இணைக்கப்படும்.

காதி பொருட்களின் இணையதள விற்பனை சுதேசி இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய உந்துதலை அளிக்கும் என்றும், உள்ளூர் கைவினை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் என்றும் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய தலைவர் வினய் குமார் சக்சேனா கூறினார்.

"நமது கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருள்களை விற்க கூடுதல் வாய்ப்பு ஒன்றை இந்த இணையதளம் வழங்கியுள்ளது. தற்சார்பு இந்தியாவை கட்டமைப்பதற்கான பயணத்தில் இது ஒரு வலிமையான முயற்சி ஆகும்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரூபாய் 50 முதல் ரூபாய் 5 ஆயிரம் வரை விலை உள்ள பொருள்கள் இந்த இணைய தளத்தில் கிடைக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x