

பிரதமரின் பொருளாதார ஆலோ சனைக் குழு தலைவராக உள்ள சி. ரங்கராஜன் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்ய உள்ளார்.
திங்கள்கிழமை பிரதமரைச் சந்திக்கப் போவதாகவும், அவரை சந்தித்துப் பேசியபிறகு தனது பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக சி. ரங்கராஜன் உள்ளார். இவரது குழுவில் சௌமித்ர சௌத்ரி, வி.எஸ். வியாஸ், பி.பி. நாயக், திலிப் எம் நச்சனே ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் சௌத்ரி திட்டக் குழுவிலும் உறுப்பினராக உள்ளார்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வர் என்று தெரிகிறது.