Published : 08 Sep 2020 05:12 PM
Last Updated : 08 Sep 2020 05:12 PM

ரயில்வே துறை பணிகளில் புலம் பெயர் தொழிலாளர்கள்: பியூஷ் கோயல் ஆய்வு

புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரயில்வே துறையில் வழங்கப்பட்ட தற்காலி பணிகள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.

கரோனா பாதிப்பு ஊரடங்கால் வேலையிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அதிகளவில் திரும்பினர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக பிரதமரின் ஏழைகள் நலன் வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் செப்டம்பர் 4ம் தேதி வரை 8,09,046 வேலை நாட்களை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளையும், பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

6 மாநிலங்களில் மொத்தம் 164 ரயில் கட்டமைப்பு திட்ட பணிகள் செப்டம்பர் 4ம் தேதி வரை செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் 12,276 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த திட்டங்களை அமல்படுத்துவதற்காக ஒப்பந்தகாரர்களுக்கு ரூ.1.631.80 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை கவனிப்பதற்கு, ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளை ரயில்வே நியமித்துள்ளது.

பிரதமரின் ஏழைகள் நலன் வேலைவாயப்பு திட்டத்தின் கீழ், ரயில்வே லெவல் கிராஸிங்கில் கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகள், ரயில்பாதைகளை ஒட்டியுள்ள நீர்நிலைகள், வடிகால்களை சுத்தப்படுத்துதால், ரயில்வே நிலையங்களுக்கு செல்லும் ரோடுகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, ரயில்வே நிலங்களின் எல்லைகளில் மரம் நடுதல், ரயில்பாதைகளின் அருகேயுள்ள நிர்நிலைகளின் கரைகளை பழுதுபார்த்தல், அகலப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x