

அடித்தள கண்டுபிடிப்புகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அடல் இன்னொவேஷன் மிஷன் மற்றும் ஸ்கூநியூஸ் கூட்டு சேர்ந்தன
அடித்தள கண்டுபிடிப்புகளைப் பற்றிய ஊக்கமளிக்கும் செய்திகளை பகிரவும் பரப்பவும், நிதி ஆயோக்கின் அடல் இன்னொவேஷன் மிஷன் (எஐஎம்) மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய கல்வி ஊடக நிறுவனங்களில் ஒன்றான ஸ்கூநியூஸ் ஆகியவை கூட்டு சேர்ந்தன.
இந்தக் கூட்டின் மூலம், கல்வித் துறை பங்குதாரர்களிடையே எஐஎம் மற்றும் அடல் டிங்கரிங்க் லேப்ஸ் ஆகியவற்றின் பல்வேறு நடவடிக்கைகளைப் பற்றிய அதிக விழிப்புணர்வு உருவாவதோடு, உலகெங்கிலும் இருந்து தரமான சிந்தனைகள், செய்திகள் மற்றும் சிறந்த செயல்முறைகள் ஆகியவை பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுக்குக் கிடைக்கும்.
எஐஎம்-மால் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள் அல்லது போட்டிகளை ஸ்கூநியூஸ் தனது வலைப்பின்னலின் மூலம் ஆதரிக்கும். மேலும், நாடு முழுவதிலும் இருந்து வரும் ஊக்கமளிக்கும் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டு, பகிரப்படும்.
"ஒரு லட்சத்துக்கும் அதிகமான புதுமையாளர்களையும், வேலைவாய்ப்பை அளிப்பவர்களையும் உருவாக்குவதை அடல் இன்னொவேஷன் மிஷன் லட்சியமாகக் கொண்டுள்ளது. இதை அடைவதற்கு, நமக்கு ஊக்கம் கொடுப்பவர்களின் கதைகளை பகிர்வது அவசியமாகிறது. ஸ்கூநியூசுடனான எங்களின் கூட்டு இதை செய்யும்," என்று எஐஎம் இயக்குநர் ஆர் ரமணன் கூறினார்.