Published : 06 May 2014 11:12 AM
Last Updated : 06 May 2014 11:12 AM

ஷாமிகா ரவி - இவரைத் தெரியுமா?

$ ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் வணிகவியல் கல்வி மையத்தில் பொருளாதாரத்துறை உதவிப் பேராசிரியர், இந்திய புரோக்கிங் மையத்தின் உறுப்பினர்.

$ பொருளாதார மேம்பாடு, ஊழல் ஒழிப்பு, விவசாயிகள் தற்கொலை, சுகாதாரம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (என்ஆர்இஜிஏ) குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர்.

$ என்ஆர்இஜிஏ திட்டம் கொண்டு வரப்பட்டதால் பல வேலை வாய்ப்புகள் மறைந்துபோனதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

$ யுனிசெஃப் தொழில்நுட்பக் குழு, உலக வங்கியின் ஆராய்ச்சிக் குழு உள்ளிட்டவற்றில் ஆலோசகராக உள்ளார். வார்டன் பல்கலைக் கழகத்தின் வருகைப் பேராசிரியர்.

$ வாஷிங்டனில்உள்ள மைக்ரோஃபைனான்ஸ் நிர்வாக மையத்தில் ஆராய்ச்சி உறுப்பினராக உள்ளார்.

$ டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், டெல்லி பொருளாதார கல்வி மையத்தில் முதுகலைப் பட்டமும், நியூயார்க் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x