உதிரி வைரக்கற்கள்: ஆன்லைன் விற்பனை தொடக்கம்

உதிரி வைரக்கற்கள்: ஆன்லைன் விற்பனை தொடக்கம்
Updated on
1 min read

உதிரி வைரக்கற்கள் ஆன்லைன் விற்பனை தொடங்கியுள்ளது.

இதனை வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் இணை செயலாளர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார்.

ரத்தினக்கற்கள் மற்றும் நகை ஏற்றுமதிகளுக்கான தலைமை அமைப்பான ரத்தினக்கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழு (GJEPC) ஏற்பாடு செய்த இந்த இரண்டு நாள் கூட்டம், இணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும், மெய்நிகர் தளத்தின் மூலம் வியாபாரம் பேசுவதற்கும் வாங்குவோருக்கும், விற்பனையாளர்களுக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

தொடக்கவுரை ஆற்றிய சுரேஷ் குமார், "மெய்நிகர் விற்றல்- வாங்குதல் தான் புதிய தொழில் நடைமுறையாக இனிமேல் இருக்கப்போகிறது. பெருந்தொற்று மறையும் வரை நாம் காத்திருக்க முடியாதென்பதால், விற்போரும், வாங்குவோரும் தொடர்ந்து வர்த்தகம் செய்யக்கூடிய மெய்நிகர் தளத்துக்கு மாறுவது தான் புத்திசாலித்தனம்," என்றார்.

ரத்தினக்கற்கள் மற்றும் நகை ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுவின் தலைவர் கொலின் ஷா பேசுகையில், "பெருந்தொற்று நம்மை வித்தியாசமாக சிந்திக்க வைத்திருக்கிறது. பெருந்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அமெரிக்க மற்றும் சீன சந்தைகள் வலுவான நிலையில் மீண்டெழுகின்றன. இதனால் நமது ஏற்றுமதிகளுக்கும் நன்மை ஏற்பட வேண்டும்," என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in