கரோனா காலத்திலும் சாதனை: கரீஃப் பருவத்தில் 1095.38 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி

கரோனா காலத்திலும் சாதனை: கரீஃப் பருவத்தில் 1095.38 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி
Updated on
1 min read

இந்த ஆண்டு கரீஃப் பருவத்தில், 1095.38 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர்கள் பயிரிடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

பருப்புகள், தானியங்கள், தினை மற்றும் எண்ணெய் வித்துகள் விதைப்பது கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், நெல் விதைத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது

விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரங்கள், இயந்திரங்கள் மற்றும் கடன் போன்ற சரியான நேரத்தில் இந்திய அரசால் செய்யப்பட்ட இடையீடுகளால், பெருந்தொற்று காலத்திலும் பெரிய நிலப்பரப்பில் விளைச்சல் நடந்துள்ளதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் மாநில அரசுகள் முக்கிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன.

சரியான நேரத்தில் செயல்பட்டு, தொழில்நுட்பத்தைக் கையாண்டு, அரசு திட்டங்களின் பலன்களை அடைந்து இந்த சாதனையை படைத்ததற்காக விவசாயிகளை அமைச்சர் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in