

சமீபத்தில் நடந்த பங்குச்சந்தை சரிவினை முதலீட்டாளர்கள் ஒரு வாய்ப்பாக பார்க்கவேண்டும், எல்.ஐ.சி. இதனை ஒரு வாய்ப்பாக கருதி பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறது என்று அதன் தலைவர் எஸ்.கே.ராய் தெரிவித்தார்.
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது ஒரு பிரச்சினை அல்ல. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு வாய்ப்பு என்றார். பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கலில் எல்.ஐ.சி. தொடர்ந்து முதலீடு செய்கிறது.
இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நிறுவனங்களை பொறுத்து முதலீடு செய்வது குறித்த முடிவு இருக்கும். தவிர இதற்காக தனியாக தொகை ஏதும் ஒதுக்கப்படவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் இதுவரை நாங்கள் செய்த அனைத்து முதலீடுகளும் எங்களுக்கு லாபத்தையே கொடுத்திருக்கின்றன என்றார்.