Published : 03 Sep 2020 04:32 PM
Last Updated : 03 Sep 2020 04:32 PM

கூரியர் நிறுவனங்களுக்கு சரக்கு சேவை: ரயில்வே தொடங்குகிறது

சரக்குப் போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்களுக்கு நம்பகத்தகுந்த, வேகமான, கட்டுபடியாகக்கூடிய மற்றும் சுலபமான சரக்கு சேவைகளை ரயில்வே வழங்கவிருக்கிறது.

ரயில்வேயின் சரக்கு சேவைகளுடன் வலுவான கூட்டணியை உருவாக்குவதற்காக முன்னணி கூரியர் சேவை நிறுவனங்களின் கூட்டமொன்றை ரயில்வே மற்றும் வர்த்தகம் & தொழில்கள் அமைச்சர் பியுஷ் கோயல் நடத்தினார்.

கூட்டத்தின் போது, சரக்குப் போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்களுக்கு நம்பகத்தகுந்த, வேகமான, கட்டுபடியாகக்கூடிய மற்றும் சுலபமான சரக்கு சேவைகளை ரயில்வே வழங்கவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்திய ரயில்வேயின் மூலம் தனியார் சரக்கு சேவைகளின் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து விவாதிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

வர்த்தகம் செய்வதை எளிமையாக்குவதை துரிதப்படுத்துவதற்காக, ரயில்வே அலுவலர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மற்றும் கூரியர் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக் குழுவொன்று அமைக்கப்படவிருக்கிறது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், இரு தரப்புக்கும் பயன் தரக்கூடிய தீர்வுகள் உருவக்கப்பட்டு, அனைவரின் வர்த்தகமும் நிலையான வளர்ச்சி அடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x