போலி இணையதளங்கள்; சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

போலி இணையதளங்கள்; சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
Updated on
1 min read

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் போலி இணையதளங்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நீண்ட கால சிக்கலில் இருந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு சமீபத்தில் எடுத்தது. தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக, அரசு நிறுவனங்கள் கட்டணங்களை 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தீவிரமாகப் பணியாற்றிய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், இதை மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களிடம் எடுத்து சென்றது. குறிப்பாக, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களிடம் இடைவிடாது வலியுறுத்தியது.

கட்டணங்கள் மற்றும் தொடர் அறிக்கைகளுக்காக மாநில அரசுகளிடமும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இன்னொரு முக்கிய நடவடிக்கையாக, TReDS தளங்களில் இடம் பெறுவதற்கான கட்டணங்களை சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கோரிக்கையை ஏற்று நிதி அமைச்சகம் தள்ளுபடி செய்தது.

உதயம் பதிவு தளத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை கேட்டுக்கொண்ட சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம், பதிவு செய்து தருவதாக் கூறி ஏமாற்றும் போலி இணையதளங்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி தொழில்முனைவோரையின், தொழில் நிறுவனங்களையும் அறிவுறுத்தியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in