ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் எம்இஐஎஸ் சலுகை: உச்சவரம்பு நிர்ணயம்

ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் எம்இஐஎஸ் சலுகை: உச்சவரம்பு நிர்ணயம்
Updated on
1 min read

இந்தியாவில் இருந்து பொருள்களை ஏற்றுமதி செய்யும் திட்டத்தின் (MEIS) கீழ் கிடைக்கும் மொத்த வெகுமதிகளுக்கு வரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1.9.2020 முதல் 31.12.2020 வரை செய்யப்படும் ஏற்றுமதிகளுக்காக இறக்குமதி ஏற்றுமதி குறியீடு (IEC) வைத்திருக்கும் ஒருவருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொத்த வெகுமதி, ஒரு இறக்குமதி ஏற்றுமதி குறியீட்டுக்கு ரூ 2 கோடியை தாண்டக்கூடாது என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிக்கை ஒன்று கூறுகிறது.

மேலும், இறக்குமதி ஏற்றுமதி குறியீடு வைத்திருக்கும் ஒருவர் 1.9.2020-க்கு முன் ஒரு வருட காலத்துக்கு எந்த ஏற்றுமதியும் செய்யாமல் இருந்தாலோ அல்லது 1 செப்டம்பர் அன்று அல்லது அதற்கு பிறகு புதிய இறக்குமதி ஏற்றுமதி குறியீடு பெற்றிருந்தாலோ, அவர் MEIS-இன் கீழ் எந்த பலனையும் கோர தகுதியுடையவர் ஆக மாட்டார்.

அது மட்டுமில்லாமல், 1.1.2021 அன்று முதல் MEIS திட்டம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in