வெட்டுக்கிளி கூட்டங்கள் இல்லை: கட்டுக்குள் வந்ததாக மத்திய அரசு தகவல்

வெட்டுக்கிளி கூட்டங்கள் இல்லை: கட்டுக்குள் வந்ததாக மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டுக்கிளி கூட்டங்கள் இல்லை எனவும், பாதிப்பு கட்டுக்குள் வந்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

ஏப்ரல் 11, 2020 முதல் ஆகஸ்ட் 25, 2020 வரை, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் 2,79,066 ஹெக்டேர் பரப்பளவில் வெட்டுக்கிளித் தடுப்பு வட்ட அலுவலகங்கள் (LCO) கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், ஹரியாணா, உத்தரகண்ட் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் 2,87,374 ஹெக்டேர் பரப்பளவில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 வரை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மாநில அரசுகளால் செய்யப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட எந்தப் பகுதியிலும் வளர்ந்த வெட்டுக்கிளிகளோ அல்லது வெட்டுக்கிளி கூட்டங்களோ காணப்படவில்லை. இருப்பினும், ராஜஸ்தான், மற்றும் குஜராத் மாநிலங்களில் போதுமான வாகனங்கள் தெளிப்பு உபகரணங்களுடன் கட்டுப்பாட்டுக்கு போதுமான விழிப்புடன் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

வெட்டுக்கிளிக் கூட்டங்கள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கண்டறிந்து அவற்றை அகற்ற வெட்டுக்கிளித் தடுப்பு வட்ட அலுவலகங்களின் (LCO) தீவிரக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்கின்றன.

மத்திய விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in