Published : 26 Aug 2020 04:33 PM
Last Updated : 26 Aug 2020 04:33 PM

ஏற்றுமதி தயார்நிலை, மாநிலங்களின் செயல்பாடு: தமிழகத்திற்கு 3-வது இடம்

ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (EPI) 2020 குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது. இதில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களை முறையே பெற்றிருக்கின்றன.

ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (EPI) 2020-ஐ போட்டித்திறன் நிறுவனத்துடன் இணைந்து நிதிஆயோக் இன்று வெளியிட்டது. ஏற்றுமதி தயார்நிலை மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளைப் பற்றிய முதல் அறிக்கையான இது, சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிதல், அரசுக் கொள்கைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்; மற்றும் வசதியளிக்கும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது ஆகும்.

ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டின் கட்டமைப்பு- கொள்கை; வர்த்தகச் சூழல்; ஏற்றுமதிச் சூழல்; ஏற்றுமதிச் செயல்பாடுகள் ஆகிய நான்கு தூண்களையும், ஏற்றுமதி ஊக்குவித்தல் கொள்கை; நிறுவனக் கட்டமைப்பு; வர்த்தகச் சூழ்நிலை; உள்கட்டமைப்பு; போக்குவரத்து இணைப்பு; நிதி அணுகல்; ஏற்றுமதி உள்கட்டமைப்பு; வர்த்தக ஆதரவு; ஆராய்ச்சி, மேம்பாடு உள்கட்டமைப்பு; ஏற்றுமதி பல்வகைப்படுத்தல்; மற்றும் வளர்ச்சி நோக்குநிலை ஆகிய நான்கு துணைத் தூண்களையும் உள்ளடக்கியது ஆகும்.

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், போக்குவரத்து இணைப்பு, மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துணைத் தூண்களைப் பொருத்தவரையில், பெருவாரியான இந்திய மாநிலங்கள் சராசரியை விட நன்றாகவே செயல்பட்டிருப்பதாக ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டின் இந்தப் பதிப்பு காட்டுகிறது. இந்தத் துணைத் தூண்களில் இந்திய மாநிலங்களின் சராசரி மதிப்பெண் 50 சதவீதத்துக்கும் அதிகம் ஆகும்.

ஒட்டுமொத்தமாக, பெருவாரியான கடலோர மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களை முறையே பெற்றிருக்கின்றன. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான வசதியை அளிக்கும் வலுவான காரணிகளை பிரதிபலிக்கும் விதமாக எட்டு கடலோர மாநிலங்களில் ஆறு முதல் பத்து இடங்களில் இருக்கின்றன.

நிலப்பரப்பு மாநிலங்களைப் பொருத்தவரையில், ராஜஸ்தான் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் ஹரியாணாவும் இருக்கின்றன. இமாலய மாநிலங்களில், உத்தரகாண்ட் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசமும் இருக்கின்றன. யூனியன் பிரதேசங்களில், டெல்லி சிறந்து விளங்குகிறது, அதைத் தொடர்ந்து கோவா மற்றும் சண்டிகர் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x