

ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2633.59 மெட்ரிக் டன்னாகும். இது இலக்கை விட 4.94 சதவீதம் குறைவாகும்.
2019 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.89 சதவீதம் குறைவு. 2020 ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களில், மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி, 10,308.78 மெட்ரிக் டன். இது இலக்கை விட 3.53 சதவீதமும், கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.08 சதவீதமும் குறைவாகும்.
2020 ஜூலை மாதத்தில் இயற்கை வாயு உற்பத்தி 2443.31 எம்எம்எஸ்சிஎம் ( மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆகும். இது மாதாந்திர இலக்கை விட 10.10 சதவீதம் குறைவாகும். 2019 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.89 சதவீதம் குறைவு. 2020 ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களில், மொத்த இநற்கை வாயு உற்பத்தி, 9228.46 எம்எம்எஸ்சிஎம் . இது இலக்கை விட 11.47 சதவீதமும், கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 14.14 சதவீதமும் குறைவாகும்.
2020 ஜூலை மாதத்தில் பெட்ரோலியப் பொருள்கள் உற்பத்தி 9,386.95 மெட்ரிக் டன்னாகும். இது மாதாந்திர இலக்கை விட 7.10 சதவீதம் குறைவாகும். 2019 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.85 சதவீதம் குறைவு. 2020 ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களில், மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி, 71,350. 80 மெட்ரிக் டன். இது இலக்கை விட 13.98 சதவீதமும், கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் 17.08 சதவீதமும் குறைவாகும்.