பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் சேவை கட்டணம் ரத்து

பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் சேவை கட்டணம் ரத்து
Updated on
1 min read

சேமிப்புக் கணக்கில் மாத சராசரி இருப்புத் தொகை இல்லாததற்கான கட்டணம், குறுஞ்செய்தி சேவைக்கானகட்டணம் ஆகியவற்றை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லை எனில் கட்டணம்வசூலிக்கப்படும்.

இதேபோல், வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தல், செலுத்துதல், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுபயன்பாடு ஆகியவற்றுக்காக செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும்

இந்த இரண்டு கட்டணங்களும் ரத்துசெய்யப்படுகின்றன. எனவே, இனிமேல்வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டணங்களை செலுத்தத் தேவையில்லை எனபாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in