ஐஎன்ஜி வைஸ்யா லைஃப் இன்சூரன்ஸ் பெயர் மாற்றம்

ஐஎன்ஜி வைஸ்யா லைஃப் இன்சூரன்ஸ் பெயர் மாற்றம்
Updated on
1 min read

ஆயுள் காப்பீட்டுத் துறையில் ஈடுபட்டு வந்த ஐஎன்ஜி வைஸ்யா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்நிறுவனம் எக்ஸைடு இன்சூரன்ஸ் என்ற பெயரில் செயல்படும்.

இந்நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஐஎன்ஜி குழுமம் காப்பீட்டுத் துறையிலிருந்து வெளியேற முடிவு செய்தது. இந்த நிறுவனத்தின் பிரதான கூட்டாளியான எக்ஸைடு குழுமம் 100 சதவீத பங்குகளையும் வாங்கிக் கொள்ள முன்வந்தது. இதைத் தொடர்ந்து பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்துக்கு இந்தியா வில் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in